அமலா மற்றும் சர்வானந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கணம் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் படம் கணம். அம்மா பாசத்தை மையமாக வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்கியுள்ளார். இதில் அம்மா வேடத்தில் அமலா நடித்திருக்கிறார். இவருக்கு மகனாக சர்வானந்த் நடித்திருக்கிறார். மேலும் ரீது வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஹித்தேஷ், ஜெய், நித்யா என மூன்று சிறுவர்கள் நடித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழில் ‘கணம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
Follow on social media