முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media