பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தினத்துடன் ஆரம்பமாகும்.
இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக சிவனொளிபாதமலையின் தலைமை தேரர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவின் தலைமையில், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற கூட்டத்திலேயே தலைமை தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிவனொளிபாத மலைக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கான சேவைகள், பொது வசதிகள், அரச, தனியார் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும்.
Follow on social media