வகுப்பறையிலிருந்து மைதானத்திற்கு ஓடும்போது தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் புத்தளம் – மணல்குன்று பகதியில் உள்ள பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடும்போது
சிறுமி தரையில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow on social media