பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார் – குழப்பத்தில் போட்டியாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் என்ட்ரி கொடுத்திருப்பது போட்டியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது ராஜு, அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகிய 7 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய திருப்பு முனையான இந்த டாஸ்க்கிற்காக சரத்குமார் சூட்கேசுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றிருக்கிறார். அந்த சூட்கேசில் ரூ. 3,00,000 பணம் உள்ளது என்றும், இதை எடுத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என்று சரத்குமார் சொல்லுகிறார்.

இது போட்டியாளர்களிடையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. யார் பணப் பெட்டியை எடுத்து கொண்டு வெளியே செல்வார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting