காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், லெபனான் எல்லையிலிருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் தெற்கு லெபனானில் நடைபெறும் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் சிலர் ‘பிரஸ்’ ஜாக்கெட்டுகள் அணிந்து வெள்ளிக்கிழமை (13) சென்றிருந்தனர்.
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் நிறுவன வீடியோகிராபர் இசாம் அப்தல்லா உயிரிழந்தார். இவர் லெபனானைச் சேர்ந்தவர். மற்ற 6 நிருபர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சோக சம்பவத்துக்கு வருந்துகிறோம் என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல்ரிச்சர் ஹெக்ட் விடுத்தஅறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் தாக்குதலில்தான் இந்த உயிரிழப்பு நடந்தது என கூறவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என மட்டும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதல் எனவும், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையான புகார் அளிக்கவுள்ளதாகவும் லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Follow on social media