முல்லைத்தீவு துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கால் நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

இதே வேளை குறித்த பகுதிக்கு இன்றைய தினம் வருகை தந்த மாவட்ட நீதவான் கெங்காதரன் எச்சங்களை பார்வையிட்டார்

இதே வேளை எச்சங்களை பார்வையிட்ட சுகாதார வைத்திய உயரதிகாரி, குறித்த எச்சங்கள் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் எனவும் சட்டவிரோத சிசு கருக்கலைப்பு ஒன்றின் மூலம் சம்பவத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்

சம்பவத்தில் சிசுவின் மண்டை ஓடு, மற்றும் என்புகள், சுற்றப்பட்டிருந்ந துணிகள் மீட்கப்பட்டிருந்தன

சம்பவம் தொடர்பில் ஐயங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Follow on social media
CALL NOW Premium Web Hosting