வவுனியா பேருந்து நிலையத்தில் விபச்சாரம் செய்யும் பெண்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத விபச்சார கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு பொலிசார் தவறிவிட்டனர்.

அங்கு அமர்ந்து மது அருந்துதல் கலாச்சார சீரழிவுகளால் மக்கள் நடமாட முடியவில்லை. வர்த்தக நிலையங்களில் இளைஞர் யுவதிகள் பணியாற்ற முடியவில்லை இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய பேருந்து நிலையத்தின் மறைவான சில பகுதிகளில் பதுங்கியிருக்கும் சில பெண்கள் விடுமுறையில் வீடு செல்லும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சிலரைக் குறிவைத்து கலாச்சார சீரிழிவுகளை ஏற்படுத்தும் விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதிகளுக்கு வரும் பெண்களுக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. பல்வேறு தேவைகளான மொழிபெயர்ப்பு, புத்தகசாலைகளுக்கு செல்பவர்கள் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் பலருக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுத்துகிறது.

அப்பகுதியில் தரித்து நிற்கும் பெண்களை அகற்றி அங்கு அமர்ந்து மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பொலிசார் பக்கச்சார்பின்றி மேற்கொள்ள முன்வருமாறு மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting