ஜனாதிபதி கோட்டா – ரணில் சாபத்தை முறியடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கலந்து கொண்டார். பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கோட்டா மற்றும் ரணிலின் கொடும்பாவிகளுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டிப்பாணை மற்றும் செருப்புகளால் தாக்கியுள்ளனர்.
Follow on social media