80 மில்லிகிராம் ஹெரோயின்உடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கைக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டியின் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் கண்டி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி மத்திய சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த காவல்துறை உறுப்பினர் 2021 இல் காவல்துறையில் இணைந்துக்கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting