ஹமாஸை முற்றாக அழிப்போம் – நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெதன்யாகு கூறுகையில் “சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது, சண்டை முடிகிறது.

ஹமாஸ் தலைவருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் அமைப்பினருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் அமைப்பினர் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்” என்றார்.

ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்ததாக நெதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting