யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் என பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் சம்பவ இடத்தில் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
அது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
Follow on social media