வட்டுவாகலில் பொதுமக்கள் – இராணும் இடடையில் கடும் முறுகல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ காவலரணை பொதுமக்கள் அகற்றியதால் நேற்றிரவு அப்பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருக்கினறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதற்காக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இருந்தபோதிலும் இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் ஏ – 35 வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டபோதிலும்

தீர்த்தம் எடுக்கச் செல்ல அனுமதிக்கவில்லை. இதன் தொடராக அங்கு ஒன்று திரண்ட கிராமத்து மக்கள் இராணுவக் காலரணின் வேலிகளை அகற்றி அப்புறப்படுத்தியதுடன்,

இராணுவ முகாம் இருந்த காணி தமக்குரியது என அடையாளப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting