முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட வீடு ஒன்றில் அதிகளவான எரிபொருளை பதுக்கி வைத்திருந்த குற்றசாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைசெய்யப்பட்ட குறித்த நபர் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை 4 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சந்தேகித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனையில் 4 பரல்களில் 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை காவல்துறையினர் பிணையில் விடுவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முள்ளியவளை காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Follow on social media