உலக சந்தையில் தற்போதுள்ள எரிபொருள் விலை நிலவரங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் குறையும் என்தை காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு
எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை குறைப்பு தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வினவிய போது,
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் 3% கமிஷன் பெற அனுமதிக்கும் நீதிமன்ற உத்தரவு, ஜூலை 15, 2022 வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகு, எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர்களுக்கு கமிஷன் இல்லாமல் எரிபொருள் விலையை கணக்கிடும்போது, எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகளை அது காட்டியது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் விலை குறைப்பு குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோலுக்கானது என்று அவர் கூறினார்.
Follow on social media