தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்ன்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (21) விடியற்காலை பெய்த கடும் மழையின் காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்த பொலிஸார், மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
Follow on social media