எரிபொருள் பதுக்கிய குற்றச்சாட்டில் ,முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மன்னாகண்டல் பகுதியில் 13.08.2022 மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபர் 1590லீற்றர் டீசலினை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் புதுக்குடியிருப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் கனரக இயந்திரங்கள் , உளவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள் என்பவற்றை வைத்து பாரியளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை குறித்த வழக்கை பதிவு செய்த புதுக்குடியிருப்பு போலீசார் கைதாகிய சந்தேக நபரையும் , சான்று பொருட்களையும் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
மக்களே வீடுகளில் எரிபொருளை சேமித்து வைக்காதீர்கள் , நாட்டில் நிலவும் எரிபொருள் தர்ட்டுப்பாட்டு நிலைமை தொடேச்சியாக இருக்கும் நிலையில் வீடுகளில் எரிபொருளை தேவைக்கு மேலதிகமாக சேமித்து வைக்காதீர்கள், மீறுவோர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தயங்கமாட்டார்கள்
Follow on social media