முல்லைத்தீவில் 23 வயது இளம் மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குடும்பத் தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த ஆணும் (வயது 23) திருமணம் முடித்து
நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்ப பெண்ணின் இளம் குடும்ப தலைவனை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தோண்டப்பட்ட குறித்த அகழ்வுப்பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் 23.10.2023 மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த இளம்குடும்ப பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R

Follow on social media
CALL NOW Premium Web Hosting