ஏந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களது மக்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுவதன் மூலமாக எங்களது தாயக பூமியினை பாதுகாக்க முடியுமென சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த குழுவொன்று குருந்தூர் மலைப் பகுதியினை ஆக்கிரமிக்க போவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறு வருகைதந்த குழுவினர் முல்லைத்தீவில் முகாமிட்டு இருப்பதாக நம்பத்தகு வட்டாரங்களிடம் இருந்து அறிய முடிகின்றது. எனவே எங்களைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகத்தில் ஒரு அங்குலமேனும் சிங்கள பௌத்த பேரினவாதம் ஆக்கிரமிப்பதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
Follow on social media