மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்துள்ளமையினால் போக்குவரத்து பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரினால் நிரம்ப காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

வெள்ள நீர் அதிகரித்துவரும் காரணத்தினால் வவுனதீவு வலயறவு பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் பரவிச் செல்வதனால் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வவுனதீவு வாவியினை அண்டிய பகுதிகளில் உள்ள வயல் நிலங்களும் வெள்ள நீரினால் மூள்கியுள்ளது.

அத்தோடு மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியையும் குறுக்கறுத்து ஆற்று நீர் பரவி செல்வதனால் போக்குவரத்தில் சிரமம் நிலவி வருகின்றது.

அதேபோன்று மட்டக்களப்பு வாவியில் நீர் நிறம்பியுள்ளமையினால் மட்டக்களப்பு வாவியை அண்மித்துள்ள பல வீதிகள் நீரினால் நிறம்பியுள்ளமையினால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களது மீன்பிடி தோணிகளை கரையேற்றி வைப்பதற்கு பாரிய சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting