இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இஸ்ரேலில் உள்ள சொரோகா வைத்தியசாலையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13ஆம் திகதி கடும் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 7 ஆவது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள சொரோகா வைத்தியசாலையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் வைத்தியசாலையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting