கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை வௌியிடுமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் மிரிசுவில் பகுதியில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட இடம்பெயர்ந்திருந்த 8 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்யசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow on social media