காசாவில் ஹமாசின் வான்படை தளபதி கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் திகதி திடீரென தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 21வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் காசாவில் ஹமாசின் வான்படை தளபதி இஸ்லாம் அபு ருக்பே கொல்லப்பட்டான் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் உளவு அமைப்பான ஷின்பெட் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை ருக்பே நிர்வகித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் மூளையாக செயல்பட்டது ருக்பே என விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த 14-ம் தேதி ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தளபதி முராத் அபு முராத் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply