போலி முகநூல்கள் | அர்ச்சுனா தலைமையிலான சுயற்சைக்குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் அரசியல் பரப்புக்கு தற்போது சவால் விடும் விடயமாக போலி முகநூல் பக்கங்களின் நடவடிக்கை மாறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் காலம் நெருங்கி வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் கட்சிகள் மீதான மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துவிடும் எனவும் அரசியல் பரப்புக்களில் கூறப்படுகிறது.

நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் குறிப்பாக வடக்கு – கிழக்கில் அநுர அலை ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், தற்போது போலி முகநூல் பக்கங்களின் மூலம் பரப்பப்படும் கருத்துக்கள் தமிழ் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வாறான சர்ச்சைகள் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் அரசியல் பரப்புக்கு எழுந்துள்ள சவால் நிலைகள் தொடர்பிலான விடயங்களை விளக்கியிருந்தன.

குறிப்பாக இந்த போலி முகநூல்கள் தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் பிளவுபடுத்தும் விதமாக மாறுவதாக மணிவண்ணன் வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சாவக்கச்சேரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான சுயற்சைக்குழு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்…

Follow on social media
CALL NOW Premium Web Hosting