முல்லைத்தீவில் மீன் வியாபாரி வீதியில் மயங்கி விழுந்து மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வீதியில் சென்று கொண்டிருந்த மீன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த
குரவில் உடையார் கட்டுப்பகுதியினை சேர்ந்த ஆதிமுருகன் யோகரா என்ற வியாபாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting