தீவிரமடையும் இஸ்ரேல், ஈரான் போர் – அமெரிக்க இராணுவம் குவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் குண்டுவீச்சில் அமெரிக்கா இணையுமா என்று உலக நாடுகள் யூகித்து வந்த நிலையில், வான்வழித் தாக்குதலின் ஆறாவது நாளில் அதன் தலைநகரை விட்டு மக்கள் வெளியேறியதால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் ஆனால் இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டால், அதற்கு உறுதியாக பதிலடி கொடுப்போம் என்று, ஈரான் வொஷிங்டனுக்குத் தெரிவித்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting