ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு வாரத்திற்கு தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

“இப்போது தேர்தலுக்குப் பிந்தைய காலம் தொடங்குகிறது.

ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.

எனவே, இந்த காலகட்டத்தில் பொலிஸார் முழு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர். பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.”

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தப் பகுதியிலும் வன்முறை எதுவும் பதிவாகவில்லை. இதுவரை கைது செய்யப்பட்ட 581 பேரில் 18 வேட்பாளர்கள் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆதரவாளர்கள்.” என்றார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting