வாழைச்சேனை – நாவலடி இன்ஷானியா வீதி தக்வாப் பள்ளிக்கு அருகில் மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இருந்த மரம் ஒன்று பிரதான மின் கம்பம் ஒன்றில் முறிந்து விழுந்ததில் மின் கம்பி அறுந்துள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் மேய்ந்து திரிந்த மாடுகளில் இரண்டு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன.
இச் சம்பவத்தில் அப் பகுதியால் சென்ற நபரொருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் வாழைச்சேனை கிளைக்கு அறிவித்த போது சபை ஊழியர்கள் தாமதித்தே வருகை தந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Follow on social media