2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 18 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நிலையில், எஹதுவே பண்டாரநாயக்க தேசிய பாடசாலையின் பரீட்சை நிலையத்தில் ஆசிரியர் ஒருவரின் தவறான தீர்மானத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. திரு தர்மசேன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு விசாரணையின் பின்னர் வாழ்நாள் முழுவதும் பரீட்சை கடமைகளில் ஈடுபட தடை விதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வினாத்தாள் விநியோகத்தில் குழப்பம்
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியரினால் வினாத்தாள்களின் வரிசை எண்கள் மாற்றப்பட்டமையினால் வினாத்தாள்கள் மீண்டும் இணைக்கப்பட்டு நீண்ட நேரத்தின் பின்னர் வரிசை எண்களுக்கமைய முறையாக வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதன்படி, மஹவ பிராந்திய கல்விப் பணிப்பாளர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட பரீட்சை நிலையத்தின் தலைமை ஆசிரியர் ஆகியோர் இன்று (19) பரீட்சை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. திரு. தர்மசேன,
மாணவர்களிடம் வினாத்தாளைக் கொடுத்துவிட்டு விடை எழுதத்துவங்கிய பின்னர் மீண்டும் சேர்க்க முடியாது.வரிசை எண்களை மாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளோம்.இருப்பினும் ஆசிரியரினால் தவறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை கையளிப்பார்கள்.எங்கள் அதிகாரிகள் நாளை அல்லது நாளை மறுநாள் மாணவர்களை சந்திக்க செல்வார்கள். சம்பவம் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும்.
இந்த மாணவர்களுக்கு எப்படி நீதி வழங்குவது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் தவறு மாணவர்களை பாதிக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் அத்தகைய ஆசிரியர்களை வைத்து எப்படி தேர்வு நடத்துவது என்பது எமக்குப் புரியாது என்றும் பதிலளித்துள்ளார்.
Follow on social media