புத்தளத்தில் நேற்று (6) மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்றிருந்த போது, கடையின் உரிமையாளருடன் இரு நபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு குறித்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், சந்தேகநபர்களால் அவர் கத்தியால் குத்தப்பட்டார்.
காயமடைந்தவர் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய வில்லிவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media