முல்லைத்தீவில் வர்த்தகர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

குடும்பத்தை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்துவந்த வர்த்தகர் வீட்டுக்குள் நுழைந்த 4 பேரினால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு – செம்மலையில் வசிக்கும் அவர் குடும்பத்தாருடன் கருத்து முரண்பாடு காரணமாக வெளியேறி அளம்பில் பகுதியில் தனது தந்தையாருடன் வசித்துவந்துள்ளார்.

நேற்றய தினம் இரவு நால்வர் அவர் இருந்த வீட்டிற்குச் சென்று அவரை வெளியே அழைத்திருக்கின்றனர். வெளியே சென்ற அவரை சிறிது நேரத்தில் சென்று பார்த்துள்ளனர்.

இதன்போது தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் அங்கு தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் உரையாடியதன் அடிப்படையில் ஏற்கனவே அவர்கள் அறிமுகமானவர்கள் என்றும் ஏற்கனவே முரண்பட்டவர்களாக இருக்கக்கூடும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொலை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting