தாக்குதலுக்கு கண்டனம் – இஸ்ரேலை தூக்கியெறிந்த நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காஸா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இஸ்ரேல் உறவை முழுமையாக துண்டிப்பதாக பொலிவியா நாடு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது இதனால் ஹமாஸ் தீவிரவாதிகள் ஒருபக்கம் அழிக்கப்பட்டு வந்தாலும், பொதுமக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதுவரை மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 3000 மேற்பட்டோர் குழந்தைகள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் போர் நடவடிக்கை காரணமாக அந்நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக பொலிவியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் காஸா ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாடுகள் இந்த உறவை துண்டிக்க வைத்ததாக பொலிவியா அரசு தெரிவித்துள்ளது.

காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தம் அறிவிக்கும் வரை இஸ்ரேலுடன் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றும் பொலிவியா குறிப்பிட்டுள்ளது

Follow on social media
CALL NOW

Leave a Reply