முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் நேற்றைய தினம் காலை தம்புள்ளை, கண்டலம பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த சிறுவன் நேற்று முன் தினம் காலை தனது தாய், தந்தை மற்றும் 11 வயது சகோதரியுடன் நீராடச் சென்ற போது முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறுவனை காப்பாற்ற தந்தை பல நிமிடங்கள் முயற்சி செய்த போதிலும் முதலை குழந்தையை இழுத்துச் சென்றுள்ளது.
சிறுவனின் உடலில் முதலை கடித்த காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Follow on social media