வாலுடன் பிறந்த பெண் குழந்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.

கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை வழியே பிரசவம் நடந்து உள்ளது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.

பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டு உள்ளது.

உருளை வடிவில் காணப்படும் இந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்து உள்ளது.

அதன் பின்னர் அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை வழியே நீக்கி உள்ளனர்.

இதன்பின்பு, குழந்தை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவ உலகில் அதிசயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting