தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துதல், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் குறித்த ஆணைக்குழு கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான பல விடயங்களை ஆராய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன், நேற்று வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் ஆணைக்குழுவின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, பணிகளை விரைவாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்காக காமைல் வியர் டேவிட் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, பல கட்சி அமைப்பை வலுப்படுத்துதல், அரசியல் கட்சிகளுக்கு பொது நிதி வழங்குதல், அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு தலைமை பொறுப்புக்கூறல், தேர்தல் பிரசாரங்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல் போன்றவற்றை ஆணைக்குழு ஆராயவுள்ளது.
அரசியல் கட்சிகளை ஊக்குவிப்பது தொடர்பில் ஆராய வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு பணிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow on social media