முடியாதுனு சொல்லியும் தயாரிப்பாளர் வற்புறுத்தினார் – ரகசியத்தை உடைத்த மீனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நடிகர் ரஜினிகாந்துடன் குட்டி சிறுமியாகவும் நடித்து ஜோடியாக ரொமான்ஸ் செய்தும் நடித்து பிரபலமானார் நடிகை மீனா. பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த மீனா நைனிகா என்ற மகளை பெற்று வளர்த்தார். சில காலம் சினிமாவை விட்டு விலகி அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த மீனா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பேட்டியொன்றில், சில படங்களில் நடித்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், பல வருடம் கழித்து கம்பேக் படமாக கொடுத்த படம் திரிஷ்யம். இப்படத்தில் முதல் கதையை கேட்ட பின் எனக்கு பிடித்ததாகவும் ஆனால் படப்பிடிப்பு கேரளாவில் நடக்கும் என்று கூறினார்கள். படத்தின் தயாரிப்பாளரிடம், எனக்கு இப்போது இந்த படத்தை பண்ண முடியாது ரொம்ப கஷ்டம்.

என் குழந்தைக்கு இப்போது தான் 2 வயதாவதால் என்னால் விட்டுவிட்டு வரமுடியாது. இதை என்னால் பண்ண முடியாது என்று கூறினேன்.

ஆனால் படக்குழு மீண்டும் என்னிடம் திரும்பவும் வந்து, நீங்கள் மட்டும் இல்லாமல் வேறு யாரையும் இந்த ரோலில் நடிக்க நினைத்து பார்க்கக்கூட முடியாது நீங்களே நடித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர் வற்புறுத்தினார்.

உங்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கிறோம் தயவு செய்து வாங்க என்று கூறியதால் நான் திரிஷ்யம் படத்தில் நடித்ததாக மீனா கூறியிருக்கிறார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply