கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தில் சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வீட்டில் இல்லை என கணவர் அவரது தாயாருக்கு அறிவித்ததன் அடிப்படையில் அவரை தேடிய போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய திருமணமான யுவதியே உயிரிழந்துள்ளார். பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவருடன் சேர்ந்து கடை ஒன்றை நடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 9.50 மணியளவில் கணவர் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதாக கூறி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர். பின்னர் காலையில் இருவரும் வசித்த வீட்டின் பக்கத்திலிருந்து
அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Follow on social media