சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி – போகம்பர சிறைச்சாலையில் ஹெரோய்ன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (20) இரவு 10 மணியளவில் அவர் சிறைச்சாலைக்குள் வைத்து தூக்கிட்டு இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பாவெல – குருதெனிய பிரதேசத்தில் தினேஷ் பிரியதர்ஷன (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம், தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting