இலங்கையில் காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது முன்பே காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் இரத்தினபுரி – சமனலவெவ பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (06-04-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சனிக்கிழமை (08-04-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சமனலவெவவை பார்வையிடுவதற்காக குறித்தன்காதல் ஜோடி, மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது.
ஓரிடத்தில் நின்றிருந்த அந்த நபர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கூறியுள்ளார்.
தான் பொலிஸ் அதிகாரி என்றும் போதைப்பொருள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
இருவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக்கூறி, மோட்டார் சைக்கிளுடன் அவ்விளைஞனுக்கு கைவிலங்கு இட்டுள்ளார்.
அதன்பின்னர், அந்த யுவதியை பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று முழு நிர்வாணமாக்கி, துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன்பின்னர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அந்த 18 வயதான யுவதியை நிர்வாணமாக படம்பிடிக்க முயற்சித்துள்ளார்.
இருப்பினும், அதற்கு அந்த யுவதி இடமளிக்கவில்லை என விசாரணைகளின் ஊடாக அறியமுடிந்துள்ளது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரியென தன்னை கூறிக்கொள்ளும் நபரொருவர், சுற்றிதிரிவதாகவும் அவர், இளம் ஜோடிகளை இலக்குவைத்து கைவரிசையை காண்பித்து வருவதாகவும் சமனலவெல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்து நிர்வாணமாக இருந்த யுவதியை மீட்டதுடன், கைவிலங்கு போடப்பட்டிருந்த இளைஞனையும் மீட்டு பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதும் பிள்ளையொன்றின் தந்தை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Follow on social media