ஒன்றாக மதுபானம் அருந்திய கணவன் மனைவி – மனைவியை கொன்ற கணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஒன்றாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த கணவன் – மனைவி இடையே உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு – கருப்பிடமலை நெவுண்டலியமடு பகுதியில் உள்ள வயல் வெளியில் நேற்றுமுன்தினம் 18ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.

கரடியன் குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான ஜெயக்குமார் புவனேஸ்வரி என்பவரே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த வயல் பிரதேசத்தில் வேளாண்மை செய்துவரும் விவசாயி ஒருவரின் வயலுக்கு வேளான்மை காவலுக்கு அமர்தப்பட்ட கரடியன் குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளை கொண்ட வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது 10 வயதான மூத்த பிள்ளையை அவரது அம்மம்மாவுடன் தங்கவைத்துவிட்டு

அவரது மனைவி மற்றும் 5, 3 வயது குழந்தையுடன் வயலில் காவலுக்காக அமைக்கப்பட்ட குடிசையில் தங்கி இருந்து வேளாண்மை காவல் காத்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவதினமான 18 ஆம் திகதி இரவு

வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது மனைவி ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றி சண்டையாக மாறியதையடுத்து அங்கிருந்த மண்வெட்டிப் பிடியினால் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட 35 வயதுடைய வல்லிபுரம் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு தடையவியல் பொலிஸ் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்து நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting