மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறீ வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி இன்று (13) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மூன்று போ் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த பேருந்து அதிகாலை 5.30 மணிக்கு மட்டு ஊறணி சந்திக்கு அருகில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
பேருந்தில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media