அரசியல்வாதியின் ஆதரவாளர் நடத்திய விபச்சார விடுதி முற்றுகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் குறித்த நபர், கண்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வெளி இடங்களிலும் இவ்வாறான பல விபச்சார நிலையங்களை இயக்கி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting