தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வருகைத் தந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமனன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது மனைவியின் வீட்டில் தங்கியிருந்து கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு பிள்ளையின் தந்தையான இவர், லிட்டில்வெளி பிரதேசத்தில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு தனது மாமனாருடன் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
எனினும், அந்த வீட்டுக்கு அருகிலிருந்து காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர், தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் தொடர்பில் கலஹா மற்றும் கம்பளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media