வவுனியாவில் இளைஞனுடன் சென்ற 17 வயது சிறுமி பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22 ) தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இளைஞர் ஒருவருடன் சிறுமி அங்கு சென்றுள்ளார். குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது சிறுமி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு சிறுமியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜன்சிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (22) மதியம் குறித்த சடலத்தை பார்வையிட்ட வவுனியா பதில் நீதவான் திருஅருள், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த மரணமானது நீரில் மூழ்கியமையால் ஏற்டபட்டது என தெரிவித்துள்ளார்.

பின்னர், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting