மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – இளைஞன் விளக்கமறியலில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சனிக்கிழமை (12) மட்டக்களப்பு நீதவான் நீதின்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியின் தாய் தந்தை வேலை நிமிர்த்தமாக பண்ணை ஒன்றில் தங்கி வாழந்து வரும் நிலையில் அவர்களது நகர் பகுதி வீட்டில் சிறுமி அவரது அம்மம்மாவுடன் தங்கிருந்து கல்விகற்று வருகின்றார்.

இந்த நிலையில் சிறுமி கடந்த மாதம் 22 ம் திகதி நகர்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து தனிமையில் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துச் சென்றதையடுத்து அந்த இளைஞருடன் தொடர்பு கொண்ட நிலையில் குறித்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு கடந்த மாதம் 27 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு மோட்டர்சைக்கிளில் வந்து சிறுமியை வெளியேவருமாறு அழைத்துச் அவனது கூளாவடி வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மோற்கொண்டுள்ளான்.

இவ்வாறான நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகங்கொண்ட தந்தையார் சம்பவதினமான 8ம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது சிறுமி அங்கு இல்லை என்பதை அறிந்து கொண்டு வீட்டில் தந்தையார் மறைந்திருந்த போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் இளைஞன் ஒருவர் சிறுமியை கொண்டுவந்து விடுவதை அவதானித்த தந்தை அவனை மடக்கிபிடித்து தாக்கியதையடுத்து அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்,

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த இளைஞனை நேற்று சனிக்கிழமை கைதுசெய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த சிறுமி இதற்கு முன்னார் கார் ஒன்றில் ஆண் ஒருவர் ஏற்றிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியை சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் கண்காணிப்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting