முல்லைத்தீவில் 9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர் அவருக்கு 9 வயதாகிய பொழுது அயல் வீட்டார் ஒருவரால் துஷ்பிரயோக்ததுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து அவர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருடம் ஜனவரி மாதத்தில் வீட்டாருடன் சிறுமி இணைக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிய தந்தையால் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 வயதான அச் சிறுமி கர்ப்பிணியான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media