வலிமை அஜித்திற்கான கதையே இல்லை – வைரலாகும் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வலிமை படத்தின் கதை வேறொரு நடிகருக்காக எழுதியது என இயக்குனர் வினோத் கூறியிருப்பது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படம் அடுத்த வருடம் (2022) அதாவது வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் விலிமை படத்தின் மேக்கிங் காணொளி எல்லாம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. இதை ரசிகர்கள் பெரிதும் வைரலாகி இருந்தார்கள். இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்தது, இது நான் எழுதிய இரண்டாவது கதை. ஆனால், இது வேறு ஒரு நடிகருக்காக நான் எழுதினேன். மேலும், இந்த கதையை முதலில் வேற மாதிரி எழுதி இருந்தேன். அப்போது நான் பொலிஸ் கதாபாத்திரமாக எல்லாம் கதை எழுதவில்லை. இன்று இருக்கும் இளைஞர்களுக்கு வரும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்க்கிறோம்.

இதேவேளை, இரண்டு பிரச்சனைகளை மையமாக கொண்டுதான் நான் இந்த கதையை உருவாக்கினேன். அந்த பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி ஏற்பட்டால் வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு பெரிய புதிய கதையாக மாற்றி இயக்கியுள்ளேன். அதேபோல் என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவொரு சமரசமும் செய்யவில்லை.

இதனையடுத்து என்னை போன்ற இயக்குனர்கள் ஒரு பெரிய ஹீரோவுடன் பணியாற்றும் போது பார்வையாளர்களுக்காக படம் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் படத்தில் 10% உழைப்பை அப்படி போதும் ஒரு பெரிய நடிகரின் படத்தை ரசிகர்கள் கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து விடுவார்கள். மிரளும், ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், இதனை பார்த்த ரசிகர்கள், இது எந்த நடிகருக்காக எழுதப்பட்ட கதை? எந்த நடிகரை நினைத்து எழுதினீர்கள்? என்று கேட்டு வருகிறார்கள். அதே போல் வலிமை படத்திற்க்கு பின் அதே அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்க இருக்கிறார். அந்த படம் குறித்து பேசிய வினோத், அந்த படத்தில் ஆக்ஷனை விட வசனங்கள் அதிகமாக இருக்கும். உலக அளவில் மக்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளைப் பேசும் படமாக இருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting