பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், அதில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting