தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (14) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழும், 1ஆம் கட்டத்தின் கீழும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருக்கவும்
கொழும்பு மாவட்டம் : – சீதாவக, பாதுக்கை
களுத்துறை மாவட்டம் : – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த
காலி மாவட்டம்: – அல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம்
கம்பஹா மாவட்டம்: – அத்தனகல்லை
கேகாலை மாவட்டம்:- ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை.
இரத்தினபுரி மாவட்டம்: – அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட.
எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருக்கவும்
காலி மாவட்டம்: – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ
களுத்துறை மாவட்டம்: – பேருவளை
கேகாலை மாவட்டம்: – கலிகமுவ
குருநாகல் மாவட்டம்: – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ
நுவரெலியா மாவட்டம்: – அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: – கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல
Follow on social media