மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயில் மூலஸ்தான பகுதியில் வெள்ளிக்கிழமை (20) இரவு ஏற்பட்ட தீயினால் மூலஸ்தானம் முற்ற ஏரிந்து சம்பலாகியதையடுத்து அங்கு பெரும் திரலான மக்கள் ஒன்று கூடியதையடுத்து பெரும் பரபரப்பு .ஏற்பட்டது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியான கல்லடி சிவானந்தா கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ள பேச்சியம்மன் ஆலையத்தின் மூலஸ்தானம ஓலைக்குடிலால் அமைக்கப்பட்டடுள்ளது.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு பூஜை இடம்பெற்ற நிலையில் பூஜைக்கு ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சியம்மனின் ஓலைக்குடிலில் பட்டு எரிந்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினர் ஒன்றிணைந்து தீயை சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இருந்தபோதும் கோயில் மூலஸ்தானம் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
குறித்த அம்மாளின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டு மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில் இந்த தீ பற்றியதை கேள்வியுற்ற அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து கோயிலை சூழ்ந்து கொண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் கோயில் மூலஸ்தானம் தீபற்றியதை கண்டுற்ற பல பக்தர்கள் கத்தி கதறி அழுது புலம்பியும் பெரும் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media